யாழில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞன் மரணம்! பலப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு(Video)
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பு கருதிவிசேட அதிரடிப் படையினர் மற்றும் யாழ்பாணம் பொலிஸார் , மானிப்பாய், சுண்ணாகம் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கைதியின் வாக்குமூலம்
அவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது வாக்குமூலத்தில், பொலிஸாரால் தனக்கு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அப்பகுதியில் போராட்டம் இடம்பெறலாம் எனும் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரும்பு பாதுகாப்பு வேலிகள் கொண்டு வரப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸார் இருவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விளக்கமறியல் கைதி உயிரிழந்தமை தொடர்பில் யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் ஒரு விசாரணையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தினால் மற்றுமொரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலதிக செய்தி - தீபன்