பொன்சேகா அழைப்பு குறித்து கவனம் செலுத்தியுள்ள பாதுகாப்பு தரப்பினர்
நாட்டு மக்கள் எதிர்வரும் 9 ஆம் திகதி கொழும்புக்கு வந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறித்து பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போது கூறியுள்ளார்.
பாதுகாப்பு தரப்பினர் இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொன்சேகாவின் கருத்து பாரதூரமானது- மக்கள் தூண்டுதலுக்கு உள்ளாகலாம்

சரத் பொன்சேகாவின் இந்த அழைப்பு பாரதூரமானது எனவும் இதன் மூலம் மக்கள் தூண்டுதலுக்கு உள்ளாகலாம் எனவும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய சரத் பொன்சேகா, எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டு மக்கள் கொழும்புக்கு திரண்டு வந்த போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் அதற்காக மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் கூறியிருந்தார்.
பராசக்திக்கு வெளிநாட்டில் குவியும் வசூல்.. எவ்வளவு தெரியுமா? அமரன் படத்தை விட அதிகம் தான் Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri