ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்திற்கு பலத்த பாதுகாப்பு
கொழும்பு 10, டீ.பீ.ஜயமாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு மருதானை பொலிஸார் விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால மருதானை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, மருதானை பொலிஸ் வாயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களுடன் அங்கு வந்த பதில் பொதுச்செயலாளர் இந்த முறைப்பாட்டினை வழங்கியுள்ளார்.
கோப்புகள் மாயம்
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கோப்புகள் சில காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளுக்காக கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எந்தவொரு தரப்பினரும் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
