இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் பாதுகாப்பு கலந்துரையாடல்!
இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இலங்கையும் ஜப்பானும் வலியுறுத்தியுள்ளன.
பாதுகாப்பு உறவுகள்
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் பல துறைகள் குறித்து பாதுகாப்பு இணை அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர மற்றும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி இடையே, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகதானி சனிக்கிழமை இலங்கைக்கு வருகை தந்தார்.
இந்தநிலையில், கலந்துரையாடல்களின் போது, பேரிடர் மேலாண்மை, எல்லை தாண்டிய மனித கடத்தலைத் தடுத்தல் மற்றும் கடலில் அரசு சாராத நிறுவனங்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுதல் போன்ற முக்கியமான துறைகளில் ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து, இரண்டு தரப்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam
