கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் பலத்த பாதுகாப்பு - சுரேஷ் சலே தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே காவலில் இருக்கும்போது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் ஐந்து பேர் கொண்ட தடயவியல் மனநல நிபுணர் குழுவை நியமித்துள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் மருத்துவ பரிசோதனையை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த நீதிமன்ற விசாரணைக்கு முன்னர் சந்தேகநபர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, மருத்துவ அறிக்கையை அடுத்த வழக்கு திகதியில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அமைந்துள்ள பகுதிகளில் பெருமளவிலான பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்தையும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியையும் பாதுகாப்பதற்காக, பெருமளவிலான பொலிஸார், சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளும் பொலிஸ் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சிஐடியில் திடீரென மனம் மாறிய சுரேஷ் சலே..! பின்னணியில் கோட்டாபயவின் பயணத்தடை - கலக்கத்தில் அரசியல்வாதிகள்
இன்று வழங்கப்படவுள்ள உத்தரவு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவை, விசேட மருத்துவ நிபுணர் குழுவின் முன்பாக முன்னிலைப்படுத்தி அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்று (10) வழங்கப்படவுள்ளது.

இதன்போது சுரேஷ் சலே சார்பில் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று கடந்த ஜூன் மாதம் 04ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போதே இந்த விடயம்ஆராயப்பட்டிருந்தது.
இதனையடுத்து மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கைக்கு அமைய இது தொடர்பான கட்டளையை நீதிமன்றம் இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam