மட்டக்களப்பில் வியாழேந்திரன் மற்றும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வீடுகளுக்கு பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு(Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரண்டு முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் உட்பட அரச ஆதரவு அரசியல்வாதிகளில் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மன்றேசா, வீதியில் உள்ள சதாசிவம் வியாழேந்திரன், ஆகியோரின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களின் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசாங்க ஆதரவு அரசியல்வாதிகளில் அலுவலகங்கள் இல்லங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறதாக தெரியவந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக தற்போது நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நகர் உட்பட பல பகுதிகளில் பொலிஸார்
வீதி சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதுடன் மாவட்டம் முற்றாக செயலிழந்த
நிலையில் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 12 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam
குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகல... பிக் பாஸ் சீசன் 10-ல் ஜாய் கிரிஸில்டா? கொந்தளிக்கும் நெட்டிசன்கள் Manithan