சீன தூதரின் வடக்கு விஜயத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடு
சீனாவின் தூதுவரின் வடக்கு பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சிங்கொங் இன்றில் இருந்து 8ஆம் திகதி வரையில் வடக்கிற்கான உத்தி யோகபூர்வமாக வடக்கிற்கு பயணம் மேற்கொள்வதனால் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீவுகளுக்கு பயணம்
இக்கடிதத்தில் சீனத் தூதுவர் தமது வடக்கு விஜயத்தின் போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ். சாள்ஸ் ஆகியோரைச் சந்திக்கின்றமையோடு தீவுகளிற்கும் பயணிக்கவுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் இராஜதந்திரிகளிற்கான பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.