நீதிமன்றக் கொலையில் முன்னாள் இராணுவ அதிகாரியின் திட்டங்கள்! அம்பலமாகும் இரகசியங்கள்
இலங்கையின் தலைநகரில் சமீபத்திய மாதங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற புதுக்கடை நீதிமன்ற வளாக துப்பாக்கிச்சூடு விவகாரமானது சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
இது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
இந்தப் படுகொலை, ஒரு சட்டத்தரணி வேடமணிந்த துப்பாக்கிதாரியால் மேற்கொள்ளப்பட்டது. இந்த சந்தேக நபரின் காட்சிகளை இலங்கை ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
இந்த சம்பவத்தில் கணேமுல்ல சஞ்சீவ என்ற நபர் கொல்லப்பட்டமையையும், இலங்கையை ஆட்டிப்படைத்து வரும் போட்டி கும்பல்களால் நிகழ்த்தப்படும் தொடர் கொலைகளில் ஒன்றாகும் என்ற கருத்தையும் சில அரசியல்தரப்புக்கள் பகிரங்கப்படுத்தியிருந்தன.
மேலும், வழக்கறிஞர் வேடமணிந்த ஒரு பெண், துப்பாக்கிதாரருக்கு உதவியதாக பொலிஸ் தரப்பு தெரவித்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் விரிவாக ஆராயும் நோக்கில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியானது ஊடகவியலாளர் டில்ஷானை நேர்காணல் செய்தது.
இதன்போது குறித்த நீதிமன்றக் கொலையில் முன்னாள் இராணுவ அதிகாரியின் திட்டங்கள் அடங்கியிருப்பதாக ஊடவியளாளர் கூறிய சில கருத்துக்கள் கேள்விகளை தோற்றுவித்திருந்தது.
கணேமுல்ல சஞ்சீவ இலக்குவைக்கப்படுவதன் காரணம் என்ன? நீதிமன்ற வளாகத்திற்குள் வேடமணிந்து சந்தேகநபர்கள் எவ்வாறு நுழைந்தனர்? இதற்கு பின்னாள் உள்ள சூத்திரதாரிகள் யார்? என்பதை விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |