இரகசியமாக அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டம் அம்பலம்?
இரகசியமான முறையில் ஓமானிலிருந்து எண்ணெய் கப்பல் ஒன்றை கொண்டு வரும் முயற்சியில் இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் ஈடுபட்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 90,000 மெற்றிக் தொன் எடையுடைய எண்ணெய் கப்பல் ஒன்று இவ்வாறு ஓமானிலிருந்து கொண்டு வருவதற்கான சாத்தியங்கள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளது.
இந்த மசகு எண்ணெய் ஓமான் நாட்டினதா அல்லது ஈரானிலிருந்து வருகின்றதா என்பது குறித்து சந்தேகம் நிலவுவதாக துறைசார் வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த எண்ணெய் கப்பலின் பெறுமதியில் 25 வீதத்தை இலங்கை ரூபாவில் உள்நாட்டில் இயங்கி வரும் நிறுவனமொன்றுக்கு வழங்கவும் எஞ்சிய 75 வீதத்தை அமெரிக்க டொலர்களில் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரானிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு சர்வதேச தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இந்த எரிபொருளை கொள்வனவு செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த எரிபொருள் தொகைக்கான கட்டணம் 12000 கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தை விலையை விடவும் குறைந்த விலையில் மசகு எண்ணெய் பெற்றுக்கொள்ள அரசாங்கம் இவ்வாறு முயற்சிப்பதாக குறித்த தெற்கு ஊடகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் வங்கிக் கணக்குகள் மக்கள் வங்கியில் காணப்பட்டாலும் இந்தக் கொடுப்பனவிற்காக வேறு ஓர் வங்கியின் ஊடாக கொடுப்பனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்பட்டால் குறித்த வங்கி கறுப்புப் பட்டியலிடப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri