ஜனாதிபதியின் புகைப்படங்ளை வெளியிடுவது தொடர்பில் விசேட அறிவிப்பு
பல்வேறு நிகழ்வுகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவது தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பெறுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
அரச நிதி
அதன்படி அரச நிதியைப் பெற்று மேற்கொள்ளப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும்போது அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக செயற்படுவது அவசியமானது எனவும் ஜனாதிபதியின் செயலாளர் அரச நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார்.
மேலும், அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபன சபைகள் உள்ளிட்ட சட்டபூர்வ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசிற்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதியின் செயலாளர் எழுத்து மூலம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

விவாகரத்து செய்திக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா.. விக்னேஷ் சிவன் உடன் இருக்கும் அப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு விளக்கம் Cineulagam
