கர்தினால் கேட்டமைக்கு அமைய காவல்துறை அதிபர் “கோட்”டை கழற்றிவிட்டு செல்லமாட்டார்!
கொழும்பு பிரதேச தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர் தொடா்பில், கர்தினால் மல்கம் ரஞ்சித்தை விட, விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரிகளுக்கு, எவ்வாறு விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்பது தெரிந்திருக்கும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
எனவே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கற்பிப்பதற்கும்,விசாரணைகளுக்கு தடையேற்படுத்தாமலும் இருப்பது உசிதமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் இன்று செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
விசாரணைகளை நடத்தும்போது உடனடியாக அதில் முடிவைக் காணமுடியாது. எனவே சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் முடிவைக் கோருவது யதார்த்தமாக இருக்காது என்று கமல் குணரட்ன குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தின் பின்னர், காவல்துறை அதிபரின் ”கோட்”டை கழற்றிவிட்டு செல்லுமாறு கூறுவதற்கு உரிமையில்லை. அந்த ”கோட்“ டை அவர் வழங்கவில்லை.
எனினும் நாட்டில் உள்ள ஜனநாயகத்தின் அடிப்படையில் கர்தினால் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் இதனை ஏற்று காவல்துறை அதிபரும் அதனை செய்யப்போவதில்லை என்று கமல் குணரத்ன தெரிவித்தார்.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam