ரஷ்யாவின் அடுத்த இலக்கு இந்த நாடு தான்! அம்பலப்படுத்திய ஜெலென்ஸ்கி
உக்ரைனை தொடர்ந்து ரஷ்யா இலக்கு வைத்துள்ள நாடு தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தகவல் வெளியிட்டுள்ளார்.
விளாடிமிர் புடினின் இன்னொரு ஐரோப்பிய நாட்டை மொத்தமாக சிதைக்கும் ரகசிய திட்டத்துடன் களமிறங்க இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அம்பலப்படுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் பேசிய உக்ரைன் ஜனாதிபதி, ரஷ்யாவின் அந்த ரகசிய திட்டம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
இரகசிய ஆவணங்கள் தொடர்பில் விளக்கம்
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“உக்ரைன் உளவுத்துறை ரஷ்யாவின் இந்த ரகசிய திட்டத்தை தெரிந்துகொண்டுள்ளது.
மேலும், ரஷ்யாவின் அடுத்த இலக்கு மால்டோவா என்பதை உறுதி செய்துள்ள நிலையில், அங்குள்ள ஜனாதிபதியை தொடர்புகொண்டு இந்த விவகாரம் தொடர்பில் விவாதித்துள்ளோம்.
மால்டோவா நாட்டின் ஜனநாயகத்தை சிதைத்து, அந்த நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டு வருவதாகவே இரகசிய ஆவணங்களில் இருந்து தெரிந்துகொண்டது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.
இதேவேளை, உக்ரைன் போர் முடியுமா என உலகம் காத்திருக்கும் நிலையில், அடுத்த இலக்கை தேர்ந்தெடுத்துவிட்டோம் என ரஷ்ய வெளியுறவு அமைச்சரான Sergey Lavrov கூறியிருந்தார்.
இதன்போது அவர், ரஷ்யாவின் அடுத்த இலக்கு என மால்டோவாவை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




