இரண்டாவது தடுப்பூசியாக ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை செலுத்த அனுமதி
கோவிட் தொற்றுக்கு எதிரான எஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை ஏற்கனவே செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது அளவாக ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.
சுகாதார அமைச்சின் தேசிய ஆலோசனைக்குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மருந்துகள் துறை ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன அறிவித்துள்ளார்.
ஏற்கனவே எஸ்ட்ரா செனேகாவை முதல் அளவாக செலுத்திக்கொண்டு சுமார் 6 லட்சம் பேருக்கு இரண்டாவது அளவாக எஸ்ட்ராசெனேகாவை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
எஸ்ட்ரா செனேகாவுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பற்றாக்குறையே இதற்கான காரணமாகும். இதனையடுத்தே பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை இரண்டாவது அளவாக செலுத்திக்கொள்வது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
