நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு : இரண்டாம் முறையாகவும் நிறுத்தப்பட்ட நியமனம்
நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழு, இரண்டாவது முறையாக, எச்.எம்.வி.பி. விஜித ஹேரத் என்ற தனிப்பட்ட ஒருவரின் நியமனத்தை நிறுத்தியுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலான இந்தக்குழு, அவர் தொடர்பான தகவல்களை தொடர்புடைய புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
கடவுச்சீட்டை சட்டவிரோதமாக
போலியான இராஜதந்திர சான்றுகள், சலுகை பெற்ற கடவுச்சீட்டை சட்டவிரோதமாக பயன்படுத்துதல், வெளிநாட்டு குடியுரிமையை மறைத்தல் மற்றும் போலியான கல்வி மற்றும் தொழில்முறை கூற்றுக்கள் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிரூபிக்கப்பட்டால், இந்த குற்றங்கள் மோசடி, பயண ஆவணங்களை சட்டவிரோதமாக வாங்குதல் மற்றும் பொது வாழ்வில் தவறான நடத்தை உள்ளிட்ட இலங்கையின் சட்ட மீறல்களாக இருக்கலாம்.
ஹேரத்தின் விண்ணப்பத்தில், 2011 முதல் 2014 வரை தென் சூடானில் இலங்கையின் கௌரவ தூதராக பணியாற்றியதாக கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், வெளியுறவு அமைச்சகத்தின் சரிபார்க்கப்பட்ட பதிவுகளின்படி, தென் சூடான் அரசாங்கத்தால் இதுபோன்ற எந்த நியமனங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
பிரிட்டிஸ் குடியுரிமையைப் பெற்றதாகவும்
எனவே இது மிகைப்படுத்தல் அல்ல - இது முற்றிலும் போலியானது என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதனை தவிர பொதுச்சேவையில் இருந்து விலகிய பின்னரும் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டை சட்டவிரோதமாக வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்திய குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவரின் இந்த மீறல் குற்றவியல் தன்மை கொண்டது என்று சட்ட வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை ஹேரத் நீண்ட காலமாக இங்கிலாந்தில் வசித்து வருவதாகவும், அகதி அந்தஸ்தின் கீழ் பிரிட்டிஸ் குடியுரிமையைப் பெற்றதாகவும் நம்பப்படுகிறது என்பதையும் விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




