ரணிலை தொடர்ந்து வரும் மேலும் பல கைதுகள்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு தற்போது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று(22.08.2025) கைது செய்யப்பட்டார்.
விளக்கமறியல்
இதனையடுத்து, அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு அவரது பிணை மனு தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வந்தன.

இதன்போது, ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri