இரண்டாம் கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை! ட்ரம்பை நேரடியாக சந்திக்கவுள்ள நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், ஹமாஸுடனான இரண்டாம் கட்ட போர் நிறுத்தம் குறித்து விவதிக்க உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ள நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்திக்கும் போது "ஹமாஸுக்கு எதிரான வெற்றி", ஈரானை எதிர்கொள்வது மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பது குறித்து விவாதிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், காசா போர் நிறுத்தம் ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஹமாஸின் இரண்டு முக்கிய அதிகாரிகள், வன்முறையை நிரந்தரமாக நிறுத்த உதவும் இரண்டாம் கட்ட விவரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க தமது குழு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர்.
இஸ்ரேல் - அமெரிக்க கூட்டணி
இது "இஸ்ரேல் - அமெரிக்க கூட்டணியின் வலிமையைக்" காட்டுகிறது என்று நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி அமெரிக்க ஜனாதிபதியாக பங்கேற்று ஒரு வெளிநாட்டுத் தலைவருடனான ட்ரம்பின் முதல் வெள்ளை மாளிகை சந்திப்பு இதுவாகும்.
எனினும், காசா மற்றும் லெபனான் ஆகிய இரு பிராந்தியங்களிலும் பலவீனமான போர்நிறுத்தங்கள் நடைபெற்று வருவதாக பாலஸ்தீனிய ஆதரவு தரப்புக்கள் கருத்து கூறி வருகின்றன.
இஸ்ரேலிய ஆதிக்கம்
அங்கு இஸ்ரேலிய ஆதிக்கமானது ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவை பலவீனப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி இஸ்ரேல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மீது கவனம் செலுத்தியுள்ளது.
இஸ்ரேலின் போர்க்கால முடிவுகள் மத்திய கிழக்கை மறுவடிவமைத்துள்ளன என்றும் ட்ரம்பின் ஆதரவுடன், இது இன்னும் அதிகமாக செல்லக்கூடும் என்றும் நெதன்யாகு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
