செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி
செர்பியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.
செர்பியாவில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும்.
செர்பியா - டுபோனாவில் உள்ள ஒரு பூங்காவில் பொலிஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20 வயது இளைஞன், தானியங்கி ஆயுதத்தால் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபரைத் தேடும் நடவடிக்கை
பெல்கிரேடில் இருந்து 60 கிமீ (37 மைல்) தெற்கே உள்ள ஒரு கிராமத்திற்கு அருகே ஓடும் வாகனத்தில் இருந்து துப்பாக்கிதாரி தானியங்கி ஆயுதத்தால் சுட்டதாக தெரிவிப்படுகின்றது.
ஹெலிகாப்டர், ட்ரோன்கள் மற்றும் பல பொலிஸ் ரோந்துகளும் டுபோனாவைச் சுற்றியுள்ள பகுதியில் சந்தேக நபரைத் தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குற்றவாளி இன்னும் தலைமறைவாக உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாடசாலையில் துப்பாக்கிச் சூடு
கடந்த புதன்கிழமை, 14 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துச் சென்று, பெல்கிரேடில் உள்ள அவனது பாடசாலையில் எட்டு சக மாணவர்களையும், பாதுகாவலரையும் சுட்டுக் கொன்ற சம்பவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவங்கள் செர்பிய அரசாங்கத்தை துப்பாக்கி உரிமையின் கடுமையான கட்டுப்பாடுகளை முன்மொழிய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 3 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
