வடக்கில் சிங்கள மொழிப் பயிற்சி ஆசிரியர்களை இணைக்க ஆளுநர் பணிபுரை
இரண்டாம் மொழி சிங்கள டிப்ளோமா சான்றிதழ் பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்களை வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்து பௌத்த கலாச்சார பேரவையினால் நடாத்தப்பட்டு வருகின்ற இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியை பூர்த்தி செய்து மேலதிக பயிற்சிகளை பெற்ற மாணவர்களே பாடசாலைகளில் தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளனர்.

பாடசாலைகளில் தற்காலிகமாக இணைப்பு
குறித்த விடயம் தொடர்பில் இந்து பௌத்த பேரவையில் ஆசிரியராக கடமையாற்றும் ஆசிரியர் சுமெக்சன் தெரிவிக்கையில்,
இந்து பௌத்த பேரவையினால் நடாத்தப்டுகின்ற இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியை சுமார் 23,000 மாணவர்கள் இதுவரை கற்றுள்ளனர்.

அதன் முதற்கட்டமாக மேலதிக பயிற்சிகளை பெற்ற ஒரு பகுதி மாணவர்களை தற்காலிக ஆசிரிய பயிற்ச்சியாளராக வட மாகாண ஆளுநர் நியமிக்க நடவடிக்கை எடுத்தமைக்கு நன்றியை தெரிவிப்பதுடன் அதற்கான ஒழுங்குகளை மேற்கொண்ட இந்து பௌத்த கலாச்சார பேரவையின் பொதுச் செயலாளர் எம்.டி.எஸ் இராமச்சந்திரனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri