இலங்கைக்குள் திட்டமின்றி நுழைந்த இரண்டாவது ஈரானிய கப்பல்! ஏற்பட்டுள்ள பெரும் பதற்றம்
மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐஆர்ஐஎஸ் புஷேர் (IRINS Bushehr ) என்று அழைக்கப்படும் இந்த கப்பல், டேங்கர் வகை இராணுவ விநியோக கப்பலாக கருதப்படுகின்றது.
இலங்கை கடற்பரப்பில் 11 மணி நேரத்தின் பின்னர் குறிவைக்கப்பட்ட ஈரான் கப்பல்! வெடித்து சிதற வைத்த அமெரிக்கா
வெளியான காரணம்
இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் 12 கடல் மைல் தொலைவில் கடலில் நங்கூரமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மூழ்கியதாகக் கூறப்படும் ஐஆர்ஐஎஸ் தேனா கப்பலுக்கு பொருட்களை வழங்குவதற்காக இந்த ஐஆர்ஐஎஸ் புஷேர் கப்பல் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தானியங்கி அடையாள அமைப்பு செயலிழப்பு
கப்பலில் கணிசமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் இருப்பதாகவும், தற்போது ஏஐஎஸ் (தானியங்கி அடையாள அமைப்பு) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் கப்பல் இதற்கு முன்பு பல முறை இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், மேலும் இந்த பயணம் எந்த முன் திட்டமிடலும் இல்லாமல் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam