சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை விரைவில் நாட்டிற்கு
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் பெற்றுக்கொள்ளப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07.12.2023) 2024 ஆம் ஆண்டுக்கான வெளிவிவகார அமைச்சின் வரவு செலவுத் தலைவர் மீதான வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தின் போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
குறித்த கடன் தொகை மூலம் நாடு திவால் நிலையில் இருந்து காப்பாற்றப்படும் என்றும் அவர் நம்பிக்கை உள்ளது.
அதிகாரிகள் பற்றாக்குரை
இறையாண்மைக்கு துரோகம் இழைக்கும் வெளிநாடுகளை கையாள்வதற்கு தயாரில்லை.
மேலும், வெளிநாட்டு சேவைக்கு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
55 நாடுகளிலும், நாட்டின் 24 துறைகளிலும் பணியாற்ற 164 அதிகாரிகள் உள்ளனர். இலங்கைக்கு மிக முக்கியமான நாடான இந்தியாவில் 6 பேர் மாத்திரமே பணிபுரிகின்றனர்.
இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தேவையான ஊழியர்களின் எண்ணிக்கை 264 எனதெரியவந்துள்ளது.
எனினும், தேவையான உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியாக வெளிநாட்டு சேவைக்கான ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |