தடுப்பூசி வகைகளை மாற்றி செலுத்த அனுமதி
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாக பைசர் பயோன்டெக் அல்லது மொடர்னா தடுப்பூசியினை வழங்குவதற்கு இலங்கை சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் அவசரகால பயன்பாட்டுக்கு மொடர்னா தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதற்குத் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஜூலை 15ஆம் திகதிக்கு முன்னர் 26 ஆயிரம் பைசர் தடுப்பூசிகளும், ஒரு மில்லியன் மொடர்னா தடுப்பூசிகளும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் இரண்டாம் மருந்தளவுகள் 8-12 வாரங்கள் இடைவெளியில் வழங்கப்படும் தடுப்பூசியை விட சுமார் நான்கு மடங்கு உடலில் பிறபொருள் எதிரிகளை உருவாக்குவதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தயாரிப்பாளர்களான ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்குப் பின் பிறபொருள் எதிரியின் அளவு அதிகரிக்கப்பட்டு மூன்றாவது மருந்தளவு தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது இரண்டாவது மருந்தளவுக்கு பின்னர் அவர்களின் உடல்களில் பிறபொருள் எதிரியின் அளவு இரு மடங்காக உயர்ந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குறுகிய காலத்தில் தடுப்பூசி பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும் போது இது ஒரு சிறந்த உத்தி என, அஸ்ட்ரா செனக்கா தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மூன்றாவது தடுப்பூசி அளவு, வைரஸ்களின் நடுநிலைப்படுத்தல் மற்றும் மேலும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் தொகைகளில் உள்ள மாறுபாடுகளுக்கு எதிரான செயல்திறனை அதிகரிக்கப் பயன்படுத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில், அஸ்ட்ரா செனகா கொவிசீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுக்கொண்ட சுமார் ஆறு இலட்சம் பேர் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
