கம்பஹாவில் ஒரு ஆசனம் குறைந்து யாழில் ஒரு ஆசனம் அதிகரிக்கும்:தேர்தல் ஆணைக்குழு
எதிர்காலத்தில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தினால் கம்பஹா மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுக்கு அமைய 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2021 ஆம் ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனால், கம்பஹா மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 இல் இருந்து 18 ஆக குறையும்.
அதேபோல் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்த மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 இல் இருந்து 7 ஆக அதிகரிக்கும்.
நாட்டின் ஏனைய மாவட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றங்களும் ஏற்படாது. வாக்காளர் பட்டியலுக்கு அமைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட உள்ளது.



