ஐந்தாவது நாளாக தொடரும் தேடுதல் பணி: கவலை வெளியிட்டகடற்றொழிலாளர்களின் உறவினர்கள்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இருந்து கடந்த 27ஆம் திகதி இரவு கடலுக்கு சென்ற நான்கு கடற்றொழிலாளர்கள் இதுவரை கரைக்கு திரும்பாத நிலையில், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணி ஐந்தாவது நாளாக இன்றும்(01.06.2026) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடற்படையின் படகுகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் படகுகள் இணைந்து தேடுதலில் ஈடுபட்டுள்ளன.
ஐந்தாவது நாளாக தொடரும் தேடுதல் பணி
இதன்போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் மற்றும் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் மொத்தமாக நால்வர் கடந்த 27ஆம் திகதி இரவு 12 மணிக்கு தொழிலுக்காக கடலுக்கு சென்றுள்ளனர்.

இவர்கள் நால்வரும் இதுவரை வீடு திரும்பாத நிலையில், பல்வேறு வழிகளில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ள நிலையில், கடற்றொழிலாளர்கள் தமது உறவுகளை எதிர்பார்த்தவாறு காத்திருக்கின்றனர்.
இவர்களில் முனை பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரும், கற்கோளம் பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர்.

