உக்ரேனிய நிறுவனத்துடன் இணைந்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை எடுத்துள்ள நடவடிக்கை
உக்ரைனைச் சேர்ந்த Supernova Airlines LLC விமான நிறுவனத்திற்கு, போயிங் 737-800 ரக விமானங்களைப் பயன்படுத்தி கொழும்புக்கான அட்டவணைப்படுத்தப்படாத சரக்கு விமான சேவைகளை முன்னெடுப்பதற்கான வெளிநாட்டு விமான இயக்கச் சான்றிதழை (FAOC) இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) இன்று அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது.
இச்சான்றிதழை சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, Supernova Airlines நிறுவனத்தின் பொறுப்பு முகாமையாளர் டினேஷ் குணேஷ்குமாரனிடம் கையளித்தார்.
முக்கிய திட்டம்
இந்நிகழ்வில், நிறுவன பிரதிநிதிகளான பிரபாத் சமரதுங்க, சார்லஸ் நிர்மலநாதன் மற்றும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கப்டன் லசந்த தஹநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரநிலைகளுக்கு அமைவாக, நிறுவனத்தின் செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - இலங்கை இடையிலான சரக்கு விமானப் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தவும், இலங்கையின் தளவாடத் துறையின் வளர்ச்சிக்கும் இந்நடவடிக்கை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
YOU MAY LIKE THIS VIDEO
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri