இரண்டு நெல் களஞ்சியசாலைகளிற்கு சீல் வைப்பு
வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையால் வவுனியா தாண்டிக்குளம் மற்றும் ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள இரண்டு தனியார் நெற்களஞ்சிய சாலைகளிற்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கோவிட் தொற்று பரவலடைந்து வரும் நிலையில் உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் நாட்டிலுள்ள தனியார் நெற்களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அரசாங்கம் அறிவித்திருந்தது.
எனினும் அரசினால் அறிவிக்கப்பட்ட கால எல்லைக்குள் குறித்த தகவல்களை வழங்காத இரண்டு நெற்களஞ்சிய சாலைகளை வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்களால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த களஞ்சிய சாலைகளில் உள்ள நெல்லினை நெல் சந்தைப்படுத்தும் சபையால் நிர்ணய விலையினை செலுத்தி கொள்வனவு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
