உரிமத்தை இழந்த மது உற்பத்தி நிலையத்திற்கு சீல் வைப்பு
கொழும்பு - வெலிசர நாகொடவில் உள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் அன்ட் கோ நிறுவனத்தின் உற்பத்தி நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மென்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை கலால் கட்டளைச் சட்டத்தின் சட்ட விதிகளுக்கு இணங்க இன்று முதல் இடைநிறுத்துமாறு கலால் ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இதன் காரணமாக இன்று (05.12.2024) சீல் வைக்கப்பட்டுள்ளது.
வரி மிகுதி
மேற்படி உத்தரவுக்கு இணங்க, ஜா-எல மற்றும் கம்பஹா கலால் அத்தியட்சகர்கள் மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நிறுவனத்திற்கு சீல் வைத்துள்ளனர்.
வரி மிகுதியை செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை நவம்பர் 30ஆம் திகதி முதல் இரத்து செய்ய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (04.12.2024) டபிள்யூ.எம். நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட மதுபான உற்பத்தி உரிமங்களை இடைநிறுத்த உத்தரவு பிறப்பித்த நிலையில், அது தொடர்பிலான நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் திணைக்களம் வழங்கிய கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு மென்டிஸ் அன்ட் நிறுவனம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |