மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத நெல் களஞ்சியசாலைகளுக்கு சீல் வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நுகர்வோர் அதிகார சபையினரால் நெல் களஞ்சிய சாலைகளில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை கடந்த 4 தினங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் பதிவு செய்யப்படாமல் நெல்லினை களஞ்சியப்படுத்தி பதுக்கி வைத்திருந்த 1700 மெற்றிக் தொன் நெல் மூட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்ட 11 களஞ்சியசாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன்,அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான கே.கருணாகரனுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் காரணமாக மக்கள் தனது வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் மனிதாபிமானமின்றி ஒரு சில வியாபாரிகள் பொருட்களினை விற்பனை செய்கின்றனர்.
நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக கட்டணங்கள் அறவிடுவது, பொருட்களினை பதுக்கி வைப்பது மக்களின் வாழ்வாதாரத்தையோ, அரசாங்கத்தின் நிருவாக நடைமுறையையோ கண்டுகொள்ளாமல் தங்களது வியாபார தந்திரோபாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் அந்நடவடிக்கைகளுக்கு எதிராகச் சட்ட வரையறைக்குட்பட்டு இறுக்கமான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளரும் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத்துக்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கும் பணிப்புரைக்கும் அமைவாகக் இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
கடந்த 25 ம் திகதி தொடக்கம் நேற்று சனிக்கிழமை 28 திகதிவரை தொடர்ந்து 4 தினங்கள் நுகர்வோர் அதிகார சபை பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள பதிவுசெய்யப்படாத நெல் களஞ்சியசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது பதிவு செய்யப்படாமல் நெல்லினை களஞ்சியப்படுத்தி பதுக்கி வைத்திருந்த 1700 மெற்றிக் தொன் நெல் மூட்டைகளை களஞ்சியப்படுத்தப்பட்ட 11 களஞ்சியசாலைகள் சீல் வைக்கப்பட்டதுடன், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை நெல்லினை பதுக்கி வைத்திருந்த சில வியாபாரிகள் தானாக முன்வந்து தங்களுடைய நெல்களை அரசாங்க நெல் சந்தைப்படுத்தும் அதிகார சபைக்கு வழங்கவும் உடன்பட்டதுடன் நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்தினை மீறிய வியாபார நிலையங்களுக்கு எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.











அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
