கடலுணவுகளின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பு
வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல்களில் பிடிக்கப்படும் கடலுணவுகளே வவுனியாவிற்கு கொண்டு வரப்பட்டும் நிலையில் தற்போது அதன் விலைகள் சடுதியாக அதிகரித்துள்னள.
எரிபொருள் விலையேற்றமே இதற்கு காரணம் என கடலுணவு வியாபாரிகளால் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு கிலோகிராம் விளைமீன் 1000 ரூபாவாகவும், பாரை மீன் 1200 ரூபாவாகவும், முரல் மீன் 600 ரூபாவாகவும், சீலா மீன் 1000 ரூபாவாகவும், கணவாய் 1200 ரூபாவாகவும், சின்ன இறால் 1200 ரூபாவாகவும், பெரிய இறால் 1800 ரூபாவாகவும், நண்டு 1600 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரியவருகிறது.
அதேவேளை கீரி மீன் 700 ரூபாவாகவும், சால மீன் 300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது..
இதனால், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சாதாரண மக்கள் கடல் உணவுகளை
வாங்குவதற்கு பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
