இறங்கு துறை இன்மையால் பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிளிநொச்சி-முழங்காவில் அன்புபுரம் பகுதியில் இறங்குதுறை இன்மையால் தாம் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்பு புரம் கிராமத்தில் 110க்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் குறித்த பகுதியில் 70க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் மற்றும் வெளியிணைப்பு இயந்திரங்களும் காணப்படுகின்றன.
இறங்கு துறை வசதிகள் இன்மை
இவற்றை கடற்தொழிலுக்கு கொண்டு செல்வதற்கும் தொழில் முடித்து மீள திரும்புவதற்கும் ஏற்ற வகையில் உரிய இறங்கு துறை வசதிகள் இன்மையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக குறித்த பகுதியில் உள்ள துறையை ஆழப்படுத்தி புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுதுள்ளதாகவும் இதுவரை புனரமைப்படவுல்லைஎனவும் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கை
இவ்வாறு இறங்குதுறை புனரமைக்கப்படாமையினால் நாளாந்தம் கடற்தொழிலுக்கு சென்று வருவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ள கடற்தொழிலாளர்கள் அனர்த்தங்களின் போது படகுகள் மற்றும் இயந்திரங்களை பாதுகாக்க முடியாமலும் அடிக்கடி சேதங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இவ்வாறு இழப்புகளையும், பாதிப்புகளையும் தாங்கள் தொடர்ந்தும் எதிர்கொள்வதாகவும் எதிர்காலத்தில் குறித்த பகுதியில் உள்ள இறங்கு துறையை ஆழப்படுத்தி புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri