மன்னார் கரையோர பிரதேசத்திற்குள் திடீரென உட்புகுந்த கடல் நீர்
மன்னார் (Mannar) - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் திடீரென கடல் நீர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் உட்புகுந்துள்ளது.
குறித்த சம்பவமானது இன்று (22.05.2024) மதியமளவில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில், கடற்றொழிலாளர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.
உட்புகுந்த கடல் நீர்
இந்த நிலையில், வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று மதியம் திடீரென கடல் நீர் உட்புகுந்ததுடன் கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்துள்ளது.
எனினும், படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்பதுடன் திடீரென கடல் நீர் உட்புகுந்தமையினால் வங்காலை கடற்றொழிலாளர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து, வங்காலை பங்குத்தந்தை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று நிலமையை பார்வையிட்டதோடு, சம்பவம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |