கல்முனையில் பதற்றம்.. திடீரென வீதிக்கு வந்த கடல் நீரால் அச்சத்தில் மக்கள்!
கல்முனைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை கடல் கொந்தளிப்பு காரணமாக சீறி எழுந்த அலைகள் வீதியைத் தாண்டி ஊருக்குள் போக முற்பட்டது.
கடற்றொழிலாளர்கள் தமது படகுகளை அவசர அவசரமாகப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். கல்முனையின் கரையோர கடல் பகுதிகளில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். குறிப்பாக பெரியநீலாவணை, மருதமுனை, கல்முனை போன்ற கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பு நிலையில் காணப்படுகிறது.
பொலிஸாரின் அறிவுறுத்தல்
கடல் அலைகளின் சீற்றம் காரணமாக வீதீகளில் கடல் அலை பரவுவதோடு கடல் அரிப்பும் பாரியளவில் இடம்பெறுகின்றது. மீனவர்களது. மீன்பிடிப் படகுகள் யாவும் வீதிக்கு இழுக்கப்படுகின்றன.

கடல் பகுதிகளை பார்வையிடச் செல்லும் மக்கள் அவதானத்துடன் நடந்துகொள்ளுமாறு பெரியநீலாவணை பொலிஸார், மக்களை அறிவுறுத்துவதைக் காணக்கூடியதாக இருந்தது.
கல்முனையில் இன்று மழை சற்று குறைந்திருந்தாலும் காற்றின் வேகம் சற்று அதிகமாகவே காணப்படுகின்றது. வெள்ள நிலையும் தொடர்கின்றது. மக்களது இயல்பு நிலை முற்றாக சீர்குலைந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








பிரித்தானியாவின் இலையுதிர்கால பட்ஜெட் 2025 - ரேச்சல் ரீவ்ஸ் அறிவித்த புதிய வரி திட்டங்கள் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்த பிறகும் ஜோடியாக சுற்றிய தீபிகா-சரவணன் இடையில் இப்படியொரு பிரச்சனையா? Cineulagam