மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கரையொதுங்கிய கடல் பசு! (Photos)
மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரையொதுங்கியுள்ளது.
நேற்று(22.06.2023) மன்னார் வளைகுடா தோணித்துறை கடற்கரையில் இறந்த நிலையில் 8 வயது மதிக்கத்தக்க ஆண் கடற்பசு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கரையொதுங்கிய கடல் பசு சுமார் 1500 கிலோ எடை கொண்டதாக இருக்கலாம் எனவும், உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை செய்த பின்னரே தெரியவரும் கால்நடை மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரேத பரிசோதனைக்கு பின் கடற்கரை மணலில் புதைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |










சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
