பிரித்தானியாவில் இந்திய உணவகத்திற்கு முன்பாக கத்திக்குத்து தாக்குதல்
பிரித்தானியாவில் இந்திய உணவகம் ஒன்றின் முன்பு நடந்த கொடூர கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் சனிக்கிழமை அதிகாலை ஓல்ட்ஹாம் நகர மையத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒருவர் உயிரிழப்பு
இதன்போது கத்திக்குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 40 வயது நபர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் மரணமடைந்துள்ளார்.
இருவருக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் காரணமாகவே கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சம்பவம் குறித்து பொதுமக்கள் பலரை விசாரித்துள்ளதாகவும், மேலதிக தகவல் தெரியவரும் மக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிரடி காட்டிய அர்ஜுன் டெண்டுல்கர்: 153 ரன் விளாசிய கேரள வீரரின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தல் News Lankasri
Super Singer: சூப்பர் சிங்கர் குடும்பத்தின் கடைசி Good Bye... அரங்கமே கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan