மீண்டும் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டன..
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரமும் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் G.L.பீரிஸ் சற்று முன்னர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
மேலும், பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தீவிரமடையும் கோவிட் தொற்றின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் படிப்படியாக மூடப்பட்டு வந்த நிலையில் கடந்த 27ஆம் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்று வரையில்(30) விடுமுறை வழங்கப்பட்டது.
அதன் பின்னர் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் வார இறுதி நாட்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேய அடுத்தவாரமும் பாடசாலைகள் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri