நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் இன்று மூடப்படும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாணம் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை வலுவடைந்து வருவதால், அடுத்த சில நாட்களுக்கு மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், நாட்டின் தென்மேற்கு பகுதியிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று எச்சரித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
