புத்தாண்டு விடுமுறையில் பாடசாலை மாணவர்கள் மூவருக்கு நேர்ந்த விபரீதம்!
அம்பலாங்கொடை - அக்குறல கடற்கரையில் இன்று நீராடச்சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த மாணவர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய மாணவர் காணாமல்போயுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மெட்டியகொட வேதவத்தை பகுதியைச் சேர்ந்த அம்பலாங்கொட தர்மசோக விதுஹலேயைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இருவரின் நிலைமை கவலைக்கிடம்
இதன்போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஏனைய இரு மாணவர்களையும் பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இரு மாணவர்களும் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இந்த மூன்று மாணவர்களும் புத்தாண்டு விடுமுறை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாக வீடுகளில் தெரிவித்து கடலில் குளிக்கச் சென்ற போதே திடீர் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.



