தேனீ கொட்டுக்கு இலக்காகிய பாடசாலை மாணவர்கள்
புதிய இணைப்பு
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் இன்று (30.05.2025) காலை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேனீக்கள் குத்தியதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட 63 நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய பாடசாலை வளாகத்திற்குள் பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தேனீக்கள் குத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (30.05.2025) காலை நடைபெற்றுள்ளது.
வலயமட்ட விளையாட்டுப்போட்டிகள்
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய வளாகத்திற்குள் கட்டிடம் ஒன்றில் தேனீக்கள் கூடுகட்டி இருந்துள்ளது.

இன்றையதினம் வலயமட்ட விளையாட்டுப்போட்டிகள் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற நிலையில் திடீரென தேனீக்கள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை துரத்தி கொத்தியுள்ளது.
இதனால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தேனீக் கொட்டிற்கு இலக்கான மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்டார்.
அத்தோடு பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை அகற்றாமல் அசமந்தமாகச் செயற்பட்டமைக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினரை நேரடியாகச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மிகக் கடுமையாக எச்சரித்ததுடன், பாடசாலை வளாகத்திலுள்ள தேனீக்கூடுகளை உடனடியாக அகற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri