பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் - விசாரணையில் வெளியான புதிய தகவல்
மத்துகம - குருதிப்பிட்ட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட இளம் தந்தையின் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி இரவு பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்த நிலையில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய மூன்று மாணவர்களால் ஒரு பிள்ளையின் தந்தை அடித்துக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அன்றிரவு சந்தேகத்தின் பேரில் மாணவர்கள் மூவரையும் வெலிப்பன்ன பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய பின்னர் 28ஆம் திகதி வரை மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
கொலைக்கான காரணம்
இந்நிலையில், தற்போது பொலிஸாரின் விசாரணைகளில் சந்தேகத்திற்குரிய மூன்று மாணவர்களில் ஒருவருக்கும் கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர் ஒருவரின் மகளுக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரைப் பார்ப்பதற்காக மாணவர்கள் வேடிக்கையாகச் செல்வதாகவும், கொலை நடந்த தினத்தன்று அவர்கள் பயிற்சி வகுப்பு முடிந்து அந்தப் பகுதிக்கு சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் வீடு திரும்பிக்கொண்டிருந்த மூன்று மாணவர்களை துரத்திச் சென்றுள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையில், பிரேத பரிசோதனையில் இறந்தவரின் மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டுள்ளதாகவும், தலைக்கவசங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதால் உயிரிழப்பு ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் குடும்ப பின்னணி
எனினும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்களின் புகைப்படங்கள் மற்றும் முகநூல் கணக்குகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் உயிரிழந்தவரின் மனைவி பணிபுரியும் பாடசாலை மாணவர்கள் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய மூன்று மாணவர்களில் ஒருவரின் தந்தை உயிரிழந்துள்ளதாகவும், மற்ற இரு மாணவர்களும் பெற்றோருடன் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் ஒருவரின் பெற்றோர் ஆடை தைக்கும் தொழிலை மேற்கொண்டு வருவதாகவும், மற்ற இருவரின் பெற்றோர்கள் கூலித் தொழிலாளிகளாக வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, தாக்குதலில் உயிரிழந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையின் இறுதிக் கிரியைகள் நேற்று இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
