பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஐந்து வருடங்களை பூர்த்தி செய்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் குழந்தைப் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளமையினாலேயே இந்தநிலை ஏற்ப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.
அமைச்சர் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் கல்வி
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐந்து வருடங்களை பூர்த்திசெய்த சுமார் 2 இலட்சத்து 92 ஆயிரம் பாடசாலை மாணவர்கள் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.
எனினும், பத்து வருடங்களுக்கு முன்னர் 3 இலட்சத்து 40 ஆயிரம் பிள்ளைகள் பாடசாலைகளில் கல்வி பயின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் குழந்தைப் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளமையினால் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரமாக குறைவடைந்துள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |