பசியால் வாடும் பாடசாலை மாணவர்கள்..! வெளியான தகவல்
பாடசாலைகளில் நடத்தப்பட்ட சுகாதார ஆய்வில், ஏராளமான பாடசாலை மாணவர்கள் பசி மற்றும் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு மற்றும் குடும்ப சுகாதார சேவைகள் பணியகம் ஆகியவை கடந்த ஆண்டு இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளன.
இதற்கமைய, 40 அரச பாடசாலைகளில் 8 மற்றும் 12ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 3,843 மாணவர்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
உட்கொள்ளும் உணவு...
இதில், 13 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களில் 4.7 சதவீதமானோர் பசியால் வாடுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 17.4 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை உட்கொள்வதாகவும், அவர்களில் பெரும்பாலோர் சிறுவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
மேலும், 28 வீதமான மாணவர்கள் தினமும் சர்க்கரை பானங்களை உட்கொள்வதாகவும், 28.5 வீதமானவர்கள் உப்பு நிறைந்த சிற்றுண்டிகளை உட்கொள்வதாகவும் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், 29.3 வீதமான மாணவர்கள் அதிக கொழுப்புள்ள உணவுகளையும், 40.9 வீதமானோர் அதிக சீனி உள்ள உணவுகளையும் தினமும் உட்கொள்வதாக அறிக்கை கூறுகிறது.
இதற்கமைய, கணக்கெடுப்புக்கு முந்தைய வாரத்தில் 70.4 வீத மாணவர்கள் குறைந்தது ஒரு முறையாவது துரித உணவையே உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
