பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் இன்று (14.2.2024) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தோல் அரிப்பு மற்றும் தழும்புகள்
வெல்லவாய - மல்வத்தாவல பகுதில் உள்ள பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர்.

அப்பாடசாலையில் பயிலும் 18 மாணவர்கள் தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர்.
இதனையடுத்து சுயீனமடைந்த மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நிலைமை பாரதூரமாக இல்லை என வெல்லவாய ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 23 நிமிடங்கள் முன்
450-க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் திரும்பவே இல்லை: அமெரிக்க செயலருக்கு பிரித்தானியா கண்டனம் News Lankasri
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri