பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நீராடச்சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி
பயாகல - கலமுல்ல பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவரொருவர் தனது 17 ஆவது பிறந்த நாளில் நண்பர்கள் இருவருடன் நீராடச்சென்ற போது கடலில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலமுல்ல பகுதியை சேர்ந்த ரண்முத்து டெரன் சில்வா என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல்போயுள்ளார்.
அலையில் அடித்துச்செல்லப்பட்ட மாணவர்கள்
பிறந்த நாள் கொண்டாட்டங்களின் போது பயாகலை கலமுல்ல புனித அந்தோனி வீதி முனையிலுள்ள கடற்பகுதியில் நண்பர்கள் மூவரும் நீந்திக்கொண்டிருந்த போது மூவரும் திடீரென அலையில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது அருகில் இருந்த இளைஞரொருவர் தண்ணீரில் குதித்து மாணவர் ஒருவரைக் காப்பாற்றியுள்ளார்.
எனினும், மற்றைய இரு மாணவர்களும் மரத்தடியில் தொங்கிக்கொண்டிருந்ததாகவும் அவர்களில் ஒருவரைக் காப்பாற்றும் போது மற்றைய மாணவன் திடீரென நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
