யாழில் மோட்டார் வாகனத்தில் சென்ற பாடசாலை மாணவன் பலி
யாழ்ப்பாணம் சுழிபுரம் சந்தியில் மோட்டார் வாகனத்தில் சென்ற பாடசாலை மாணவன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றையதினம் (05.12.2024) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
17 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் மோட்டார் வாகனத்தில் மூளாய் நோக்கி பயணித்துள்ளார். இந்நிலையில், சுழிபுரம் சந்தியில் வாகனம் வேகக்கட்டுபாட்டினை இழந்து மின்சார கம்பத்துடன் மோதிய நிலையில் மாணவன் உயிரிழந்துள்ளார்.
நேயாளர் காவு வண்டி
மோட்டார் வாகனத்தில் உடன் பயணித்த 15 வயது மதிக்கத்தக்க மற்றுமொருவர் காயங்களுக்குள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணித பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார்.
சம்பவம் குறித்து நேரில் கண்டவர்கள் கூறுகையில்,
“விபத்து ஏற்பட்டவுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவர்கள் இருவரும் கீழே விழுந்திருந்தனர். உடனே '1990' சேவைக்கு அழைத்து சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகியும் நேயாளர் காவு வண்டி வரவில்லை. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு தொடர்பு எடுத்தும் அவர்கள் பல கேள்விகளை வினவினர்.
ஆனால், நோயாளர் காவு வண்டி வரவில்லை. இந்நிலையில், உறவினர்களுக்கு அறிவித்ததன் பின்னர் குறித்த மாணவனின் நண்பர்கள் வந்தனர்.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, பட்டா ரக வாகனத்தில் மாணவர்களை ஏற்றி சென்றோம்.
எனினும், தீவிர தன்மையை கருத்திற் கொண்டு மூன்றாம் கூட்டுறவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டபொழுது அங்கு மாணவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அத்துடன், மற்றைய மாணவனை யாழ். போதனா வைத்தியசாலைக்கும் மாற்றினர்.
இதேவேளை, விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து அகற்றப்பட்டிருந்த மோட்டார் வாகனம் வட்டுக்கோட்டை
பொலிஸாரால் பின்னர் மீட்கப்பட்டது” என குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில், சுழிபுரம் சந்தியில் விபத்து நிகழ்ந்ததில் ஒருவர் இறந்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri
