பிறந்த நாளில் ஏற்பட்ட விபரீதம் - மதில் வீழ்ந்து உயிரிழந்த தந்தை
நாடாளுமன்ற வீதியில் வீட்டை சுற்றி கட்டப்பட்டிருந்த மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம ரைகம, பிரதேசத்தை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளதாக வெலிக்கடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் பிறந்த நாளான கடந்த 2ஆம் திகதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த தந்தை
ஸ்ரீ ஜயவர்தனபுர, நாடாளுமன்ற வீதியில், கும்புக்கஹதுவ பகுதியில் உள்ள வீடொன்றின் மதிலில் இருந்த பழைய இரும்பு வேலியை உயிரிழந்த நபரும் அவரது மகனும் அகற்றியுள்ளனர்.

பின்னர் புதிய வேலியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது உயிரிழந்த நபரின் மகன் கடை ஒன்றிற்கு சென்றிருந்த நிலையில் மதிலின் மீதமிருந்த பகுதியை தந்தை அகற்றும் நடடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, சுவர் இடிந்து விழுந்ததுடன், குறித்த நபர் அதன் அடியில் சிக்கியதாகவும் இதனால் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan