கோர விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன் தொடர்பில் வெளியான தகவல்
தலாவ, தம்புத்தேகம, ஜய கங்கா சந்திப்பில் இன்று மதியம் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவர் சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் தலாவ, ஹங்குரக்கேத்த பகுதியை சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி 411 என்ற கிராமம் வரை செல்லும் துணைப் வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்த பாடசாலை மாணவன்
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 39 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக தலாவ மற்றும் அனுராதபுரம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவரின் உடல் அனுராதபுரம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.