விபத்தில் உயிரிழந்த தமிழ் மாணவி தொடர்பில் வெளியான தகவல்
இரத்தினபுரி - எலபாத்த பகுதியில் பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விபத்தில் உயிரிழந்த மாணவி தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் எலபாத்த பொலிஸ் பிரிவின் ரம்புக்கந்த தோட்டத்தில் உள்ள தமிழ் வித்தியாலயத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் ராமநாதன் பிரியதர்ஷனி என்ற 9 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் எலபாத்த பொலிஸ் பிரிவின் ரத்னஹங்கமுவ, அலுகெட்டியவைச் சேர்ந்தவராகும்.
தமிழ் மாணவி பலி
கடந்த 6 ஆம் திகதி, பாடசாலை முடிந்து தனது மூத்த சகோதரியுடன் வீடு திரும்பும் போது, லொறி ஒன்றின் இடது பின்புற சக்கரத்தில் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். விபத்தின் பின்னர் லொறியின் சாரதியே மாணவியை இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
மரணம் தொடர்பான விசாரணையை இரத்தினபுரி மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி தம்மி லூயிஸ் ஹேவா மேற்கொண்டார்.
மரண விசாரணை
மேலும் பிரேத பரிசோதனையை இரத்தினபுரி மருத்துவமனையின் மரண விசாரணை அதிகாரி லக்மினா தென்னகோன் மேற்கொண்டார்.

மூளை மற்றும் தலையில் ஏற்பட்ட காயங்களால் மரணம் ஏற்பட்டுள்ளதாக மரண விசாரணை அதிகாரி லக்மினா தென்னகோன் அறிவித்துள்ளர்.
விபத்து தொடர்பாக லொறி ஓட்டுநர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri