தந்தையை அழைத்து வரச் சொன்னதால் உயிரை மாய்த்த பாடசாலை மாணவி
கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுருலுனிகாவெவ ஜனசிரிகம பிரதேசத்தில் உள்ள வீட்டில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
ஹுருலுனிகாவெவ, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் உள்ள அனுர மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பாடசாலை மாணவி நேற்று முன்தினம் தனது தந்தையின் கைத்தொலைபேசியை பாடசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
இதையடுத்து பாடசாலை அதிபர் கைத்தொலைபேசியை தன்னிடம் வைத்துக் கொண்டதுடன், மறுநாள் தந்தையுடன் பாடசாலைக்கு வருமாறு பாடசாலை அதிபர் கூறியுள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த மாணவி தனது வீட்டில் இருந்த விஷம் குடித்து உயிரை மாய்த்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுமி உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுமி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

முஸ்லீம்களுக்கு எதிராக திரும்புவதை நாங்கள் விரும்பவில்லை: கணவனை இழந்த பெண் கண்ணீருடன் பேட்டி News Lankasri
