மாணவர்களின் பாதுகாப்பு: தேசிய மாணவப் படையணியில் சமூக புலனாய்வு பிரிவு
போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து மாணவர்களை பாதுகாக்க தேசிய மாணவப் படையணியில் சமூக புலனாய்வு பிரிவை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் போதைப்பொருள் அச்சுறுத்தலிருந்து நமது பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் நேற்று (02.11.2023) நடைபெற்ற ஹெர்மன்லூஸ், டி சொய்சா சவால் கிண்ணம் - 2023இன் பிரியாவிடை மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பாதுகாப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கு விசேட நன்றி
மேலும், நவீன தொழில்நுட்ப முறைகள் மூலம் நமது திறமைமிக்க மாணவச் சிப்பாய்களின் செயல்பாடுகளை பிரபலப்படுத்தவும் ஊக்குவிக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், தேசிய மாணவர் படையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தேசிய மாணவர் படையின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை கல்வி அமைச்சுடன் இணைத்தமைக்கு தனது விசேட நன்றியினைத் தெரிவித்துள்ளார்.





பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
