க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த விபரீதம்
மாத்தறையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத வந்த பாடசாலை மாணவியை தெருநாய் கடித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக ஹக்மன பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சிறுமியின் கால் முழங்காலுக்கு மேல் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பணம் வலுவிழக்கும்! வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் கணிப்பு
பரீட்சை நாட்களில் சிக்கல்
இதனையடுத்து பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி சுரங்க உபேசேகரவின் அறிவுறுத்தலின் பேரில், சம்பவம் குறித்து பொது சுகாதார ஆய்வாளர் அனுப்பப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்பின்னர் சிறுமிக்கு தேவையான முதன்மை சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பூசி போடுமாறு பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் பொது சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது பாடசாலைகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதுடன், முந்தைய பல சந்தர்ப்பங்களில், நாய்களால் குழந்தைகள் காயமடைந்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
பரீட்சை நாட்களில் மாணவர்கள் இதுபோன்ற விபத்தை எதிர்கொள்ளும்போது, மாணவர்களின் மனநிலை கடுமையாக பாதிக்கப்படுவதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியாட்கள் பரீட்சை மையங்களுக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதால், பாடசாலை கல்விசாரா ஊழியர்களைப் பயன்படுத்தி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் பொறுப்பான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan