சுவீடனில் வயது வந்தோர் பள்ளிக்குள் துப்பாக்கி தாக்குதல் : 11 பேர் பலி
சுவீடனில், வயது வந்தோர் கல்வி மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பதினொரு பேர் கொல்லப்பட்டதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது நாட்டின் மிக மோசமான துப்பாக்கிச் சூட்டு தாக்குதலாகும் என்று குறிப்பிட்டுள்ள நாட்டின் பிரதமர் இதனை வேதனையான நாள் என்றும் அறிவித்துள்ளார்.
பயங்கரவாத சம்பவமாக இருக்காது..
இந்தநிலையில் கொல்லப்பட்டவர்களில் துப்பாக்கிதாரியும் உள்ளடங்கியுள்ளதாக நம்பப்படுகிறது. எனினும் துப்பாக்கிதாரி யார் என்பது உடனடியாகத் தெரியவரவில்லை.
இருப்பினும் இது பயங்கரவாத சம்பவமாக இருக்காது என்றே தாம் நம்புவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக 2010 மற்றும் 2022இற்கு இடையில் சுவிடனின் பல பள்ளிகளில் நடந்த ஏழு கொடிய வன்முறை சம்பவங்களில் பத்து பேர் கொல்லப்பட்டதாக சுவீடனின் தேசிய குற்றத் தடுப்பு சபை தெரிவித்துள்ளது.